எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு இடையே தாய்லாந்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஞாயிற்றுக் கிழமை அமைதியாக நடைபெற்றது. தேர்தல் புற்க்கணிப்பு போராட்டம் காரணமாக 45 தொகுதிகளில் வாக்குப் பதிவு ரத்து செய்யப்பட்டது.
பிரதமர் யிங்லக் ஷினவத்ரா காலையிலேயே சென்று வாக்களித்தார். மதியத்துடன் முடிவடைந்த வாக்குப் பதிவில் பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை. மொத்தம் 500 தொகுதிகளில் 93 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 2 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை மதியம் வாக்குப் பதிவு முடிவடைந்த வுடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. முடிவுகள் அனைத்தும் தேர்தல் ஆணையத் திடம் அனுப்பி வைக்கப்படும் என்றும், வாக்குப் பதிவு நடை பெறாத மையங்களில் தேர்தல் நடத்திய பின்புதான் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அதிகாரி கள் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகள் போராட்டம்
முன்னதாக பிரதமர் யிங்லக் ஷினவத்ரா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அரசியல் சாராத குழு ஒன்றிடம் ஆட்சி நிர்வாகத்தை ஒப்படைத்து, அதன் தலைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி கள் கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வந்தன. அதை நிராகரித்த யின்லக் ஷினவத்ரா தலைமையிலான அரசு, தேர் தலை நடத்த நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து தேர்தலை புறக்கணிக்குமாறு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
எதிர்க்கட்சியினரின் போராட்டம் காரணமாக சோங்லா, டிராங், பாதாலுங், புகெட். சூரத் தனி, ரனோங், கிராபி, சம்பான் ஆகிய மாகாணங்களில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இப்பகுதிகளில் வாக்காளர்களை வாக்குச் சாவடிகளுக்கு செல்லவிடாமல் போராட்டக்காரர்கள் தடுத்தனர். சில இடங்களில் வாக்குப் பதிவு பெட்டிகளை எடுத்துச்செல்ல விடாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மொத்தம் 45 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் பாங்காக்கில் எதிர்க்கட்சியினர் நடத்திய பேரணிகள் காரணமாக ரத்சாதிவி தின் டியாங், லாக் சி ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகள் மூடப் பட்டன. இப்பகுதிகளில் ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சி யினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 7 பேர் காயமடைந்தனர். வாக்குப் பதிவு நடைபெறாத பகுதிகளில் எப்போது தேர்தல் நடைபெறும் என்பதை விரை வில் ஆலோசனை நடத்தி தெரிவிப் பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.