மத்திய கிழக்கு பகுதியில் ராணுவ பலத்தில் முதலிடம் இருக்கும் நாடு இஸ்ரேல் என்று அமெரிக்க செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
துருக்கி, சவூதி அரேபியா ஆகிய நாடுகள் ராணுவ பலத்தில் முறையே 2,3-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், எகிப்து, சிரியா, ஜோர்டான், ஓமன், குவைத், கத்தார், பஹ்ரைன், இராக், லெபனான், யேமன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
சிறிய நாடாக இருந்தாலும் இஸ்ரேலியம் நவீன ரக போர் விமானங்கள், அணு ஆயதம் ஆகியவை உள்ளன. எப்போது போர் ஏற்பட்டாலும் சமாளிக்கும் வகையில் அந்நாட்டு ராணுவம் முழு அளவில் தயாராகவே உள்ளது. இஸ்ரேலின் ராணுவ பலத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அளிக்கும் ஆதரவு சேர்க்கப்படவில்லை