அமெரிக்காவில் வடக்கு நியூ ஜெர்ஸி மாகாணத்தில் ஒரு வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.
வெஸ்ட் ஃபீல்டு கார்டன் பிளாசா என்ற வணிக வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்பட்வில்லை.
வணிக வளாகத்துக்குள் பதுங்கியிருக்கும் மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.