உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்யா – அமெரிக்கா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
உக்ரைனின் கிரிமியா பகுதியில் ரஷ்ய படைகள் ஊடுருவியதை அடுத்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் பதற் றத்தை தணிக்கும் வகையில் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சு வார்த்தை தொடங்கியது.
இதில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி உள்ளிட்டோர் பங்கேற் றனர். லண்டனில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை சுமார் 6 மணி நேரம் வரை நீடித்தது.
இப்பேச்சு குறித்து செய்தியா ளர்களிடம் பேசிய அமெரிக்க அதிகாரிகள், உக்ரைன் விவகாரத்தில் இரு தரப்புக்கும் இடையே பொதுக்கருத்து ஏதும் எட்டப்பட வில்லை என்றனர்.
ரஷ்யாவுடன் இணைவது குறித்து கிரிமியாவில் இன்று கருத்து வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதையடுத்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எடுக்கும் முடிவை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை அமையும் என்று தெரிகிறது