உலகம்

துணைவியைப் பிரிந்தார் பிரான்ஸ் அதிபர்

செய்திப்பிரிவு

நடிகை ஜூலி கேயட்டுடன் தமக்கிருந்த ரகசிய நெருக்கம் அம்பலத்துக்கு வந்ததால் சர்ச்சை எழவே தனது நெடுங்கால துணைவி வேலரி டிரையர் வைலருடனான தொடர்பை முறித்துக் கொண்டார் பிரான்ஸ் அதிபர் பிரான்ஷுவா ஹொலாந்த்.

சமூக அறப்பணி சம்பந்தமாக இந்தியாவுக்கு டிரையர்வைலர் செல்ல இருப்பதையடுத்து, வைலருடன் தனக்கு இருந்த தொடர்பை முறித்துக் கொள்வதை ஹொலாந்த் அறிவிக்கப் போகிறார் என பிரான்ஸ் பத்திரிகைகளில் செய்திகள் வெளியான நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் ஹொலாந்த்.

வேலரியுடன் உள்ள உறவு இதோடு முடிவுக்கு வருகிறது என்கிற தகவலை தெரியப்படுத்துகிறேன் என்று அறிவித்தார் ஹொலாந்த்.

பாரிஸ் நகரம், வெர்சைல்ஸ் பகுதியில் உள்ள அதிபர் இல்லத்தில்தான் டிரையர்வைலர் தங்கி இருக்கிறார். 41 வயது ஜூலி கெயட்டுடன் ஹொலாந்துக்கு நெருக்கம் இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானதால் மன உளைச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற டிரையர்வைலர் சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

பிரான்ஸின் முதல் பெண்மணி என்றே கருதப்பட்டவர் டிரையர்வைலர்.

SCROLL FOR NEXT