உலகம்

ஆஸ்திரேலியாவில் 70 ஆண்டுகளுக்குப் பின் டெங்கு நோய் தாக்கம்: சுகாதாரத்துறை அதிர்ச்சி

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவில் 70 ஆண்டுகளுக்குப் பின்னர், முதல் முறையாக டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை அதிகாரி பவுல் ஆர்ம்ஸ்ட்ராங் கூறுகையில் : மேற்கு ஆஸ்திரேலியாவின் பில்பாரா பகுதியைச் சேர்ந்தவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்தது.

அவரது, ரத்த மாதிரியை பரிசோதனை செய்தோம். அப்போது சிறு சந்தேகம் எழவே அவரது இரத்தம் மீண்டும் இருமுறை பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், அவருக்கு டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட நபர் கடந்த பல ஆண்டுகளாக எந்த ஒரு வெளிநாட்டுக்கும் செல்லவில்லை எனத் தெரிகிறது. எனவே அவருக்கு இந்த நோய் உள்ளூரில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.

70 ஆண்டுகளுக்குப் பின்னர், முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது எங்களை வியக்க வைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT