உலகம்

பிரான்ஸ் தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு: இதுவரை 4 பேர் கைது

செய்திப்பிரிவு

பிரான்ஸின் நீஸ் நகர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக் குதல் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸின் நீஸ் நகரில் கடந்த 14-ம் தேதி இரவு தேசிய தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது ஐ.எஸ். தீவிரவாதி முகமது கனரக லாரியை ஏற்றி 84 பேரை கொலை செய்தான். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு நேற்று பகிரங்க மாக உரிமை கோரியுள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இராக், சிரியாவில் எங்களுக்கு எதிராக சில நாடுகளின் படைகள் போரிட்டு வருகின்றன. அதற்குப் பழிவாங்கும் வகையில் எதிரி நாடுகள் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். தலைமை உத்த ர விட்டுள்ளது. அதன்படி எங்கள் படையின் வீரர் முகமது நீஸ் நகரில் தாக் குதல் நடத்தியுள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நீஸ் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக பிரான்ஸ் போலீஸார் இதுவரை 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் சிலர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்த விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை.

தீவிரவாத தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்களில் 50 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. 25 பேர் கோமாவில் உள்ளனர். அவர்க ளைக் காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு அதிகரிப்பு

நீஸ் நகர தாக்குதலைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ள து. தலைநகர் பாரீஸில் ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு அதிபர் ஹோலந்தே கேட்டுக் கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT