சர்ச்சைக்குரிய புதிய பாது காப்பு சட்டத்தை ஜப்பான் நிறை வேற்றியுள்ள நிலையில், எத்தகைய சூழ்நிலையில் போரை தவிர்க்க முழு முயற்சி மேற்கொள்வேன் என்று அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் ஷின்ஜோ அபே உறுதி கூறியுள்ளார்.
ஜப்பானிய படைகள் தங்கள் எல்லை கடந்தும் போரிட அனுமதிக் கும் வகையில், குறிப்பாக அமெரிக்கா மற்றும் கூட்டணிப் படை களுக்கு ஆதரவாக போரிட அனு மதிக்கும் வகையில் புதிய பாது காப்பு சட்டம் ஜப்பான் நாடாளு மன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல்முறையாக நிறை வேற்றப்பட்டுள்ள இத்தகைய சட்டத் துக்கு, உள்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சீனா மற்றும் கொரிய தீபகற்பத்திலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் மீது அமெரிக்கா படையெடுத்தது போல், தொலைதூர வெளிநாட்டுப் பிரச்சினைகளில் ஜப்பான் இழுக்கப்படலாம் என அரசியல் பார்வையாளர்கள் விமர்சித்தனர்.
இந்நிலையில் புத்தாண்டு தினத்தையொட்டி அபே நேற்று விடுத்துள்ள செய்தியில், “அமைதி மற்றும் பாதுகாப்புக்கான புதிய சட்டத்தின் கீழ் எத்தகைய சூழ்நிலை யிலும் போரை தவிர்க்க இயன்ற அனைத்து முயற்சிகளும் மேற் கொள்வோம். நமது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு அமைதியான ஜப்பானை அளிப் பதற்கான அடித்தளம் அமைப்பதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார். சீனா தனது இரண்டாம் விமானம் தாங்கி போர்க் கப்பலை உருவாக்கி வருவதாக நேற்று முன்தினம் அறிவித்தநிலை யில் அபேவின் இந்தச் செய்தி முக்கியத்துவம் பெறுகிறது.