உலகம்

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு முன்னுரிமை: டொனால்டு ட்ரம்ப் உறுதி

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பேன், உலக அரங்கில் அமெரிக்காவை அசைக்க முடியாத வல்லரசாக உருவாக்குவேன் என்று குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

குடியரசு கட்சியின் மாநாடு ஒஹியோ மாகாணம் கிளீவ்லேண் டில் நடைபெற்று வருகிறது. இதில் டொனால்டு ட்ரம்ப் கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மாநாட்டில் நேற்று அவர் பேசியதாவது:

ஜனநாயக கட்சி அதிபர் வேட்பா ளர் ஹிலாரி கிளிண்டனின் தவறான வெளியுறவு கொள்கையால்தான் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இன்று ஆலமரமாக வளர்ந்துள்ளது. நான் அமெரிக்க அதிபரானால் ஐ.எஸ். அமைப்பை அழிப்பேன்.

அமெரிக்காவில் தற்போது சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு பாது காப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. என்னை நம்பி வாக்களித்தால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவேன்.

உலக அரங்கில் அமெரிக்காவை அசைக்க முடியாத வல்லரசாக உருவாக்குவேன். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT