உலகம்

இந்தியாவுக்கு `மிகவும் வேண்டப்பட்ட நாடு’ அந்தஸ்து வழங்க பாகிஸ்தான் ஆயத்தம்

செய்திப்பிரிவு

சுமார் 300 பாகிஸ்தான் பொருள்களுக்கு சுங்க வரியை குறைத்தால், இந்தியாவுக்கு அடுத்த மாதம் முதல் “மிகவும் வேண்டப்பட்ட நாடு” வழங்க அந்நாடு தயாராக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சலுகை குறித்து இந்தியாவிடம் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வர்த்தக அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறியதாக டான் நாளேடு தெரிவிக்கிறது.

இந்தியப் பொருள்களுக்கு பாகிஸ்தான் சந்தையை பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசு 2012-ல் திறந்தது. என்றாலும் அந்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல் காரணமாக இந்த உடன்பாடு முழுவதும் நடைமுறைக்கு வரவில்லை. தற்போது இந்தியா பொதுத் தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுடன் உடன்பாடு காண இது சிறந்த நேரம் என பாகிஸ்தானின் ஆளும் முஸ்லிம் லீக் - என் அரசு கருதுகிறது. மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து விவகாரத்தில் பாகிஸ் தானின் இந்த மனமாற்றத்துக்கு, உள்நாட்டு நிலவரமே காரணம் என்றும் அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.

SCROLL FOR NEXT