உலகம்

டிசம்பர் 16, 1960 - விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட நாள்

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மேல் இந்த நாளில்தான் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் விமானங்களிலும் தரையிலும் இருந்த 134 பேர் இறந்தனர்.அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாததாக இந்த விபத்து அமைந்தது. அது பனிக்

காலத்தின் ஒரு காலைநேரம். பருவநிலை சரியில்லாததால் ஒரு விமானம் வானத்திலேயே வட்டமிடுமாறு செய்யப்பட்டு இருந்தது. அதன் விமானி அந்த வட்டத்தை திட்டமிடுவதில் தவறு செய்தார். அந்த வட்டம் இன்னொரு விமானத்தின் பாதையில் குறுக்கிட்டது. இதனால் நடுவானில் இரண்டும் மோதின.

இரண்டு விமானங்களிலும் 128 பேர் இருந்தனர். 11 வயது சிறுவன் ஸ்டீபன் விமானத்தின் இருக்கையை பிடித்து தொங்கியதாக சொன்னான். உயிரோடு விழுந்தாலும் சிறிது நேரத்தில் இறந்து விட்டான்.

ஒரு விமானம் ராணுவத் தளத்தில் விழுந்தது. இன்னொன்றின் இறக்கை, இன்ஜின் உடைந்து ஒரு அபார்ட்மென்ட் மீது விழுந்தது. பல கட்டிடங்கள் எரிந்தன.

தரையில் இருந்த ஆறு பேர் இறந்தனர். தீயை அணைக்க 72 மணி நேரம் ஆனது. விமான பயணிகள் எல்லாம் கிறிஸ்துமஸ் பரிசுகளை வைத்திருந்தார்கள், அது ஊரெல்லாம் சிதறிக்கிடந்தது.

SCROLL FOR NEXT