உலகம்

சீன நிலக்கரி சுரங்க விபத்தில் 16 பேர் பலி

செய்திப்பிரிவு

சீனாவில் ஜிங்சியாங் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 16 பேர் பலியாயினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

சீனாவின் ஜிங்சியாங் மாகாணத்தில் உரும்கி பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்க ஒன்றில் 33 பணியாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது தீடீரெனெ ஏற்பட்ட விபத்தில் 16 பேர் பலியாயினர். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT