எகிப்து நாட்டின் சர்வாதிகாரியான முபாரக் சுமார் 29 ஆண்டுகள் அந்த நாட்டை ஆட்சி செய்தார். கடந்த 2011-ம் ஆண்டில் அவருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. அதை ஒடுக்க முபாரக் ராணுவ நட வடிக்கைகளை மேற்கொண்டார். இதில் 850 பேர் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கில் கடந்த 2012-ல் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 3-ம் தேதி அவரை விடுதலை செய்தது. முதுமை காரணமாக கெய்ரோவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் முபாரக் சிகிச்சை பெற்று வந்தார்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சுமார் 6 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு நேற்று அவர் ராணுவ மருத்துவமனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்குத் திரும்பினார்.