உலகம்

பாகிஸ்தானில் இந்திய ’ரா’ உளவாளிகள் 3 பேர் கைது

பிடிஐ

பாகிஸ்தானில் சந்தேகத்தின் பேரில் இந்திய உளவு அமைப்பான ’ரா’ வை சேர்ந்த மூன்று உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட மூவர் மீது பாகிஸ்தானுக்கு எதிராக சதி செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் டான் பத்திரிகை இன்று (சனிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய நபராக கருதப்படும் கலீல் காஷ்மீருக்கு 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்றிருக்கிறார். அங்கு அவர் இந்திய உளவு அமைப்பான ராவின் அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்துள்ளார். ரா அமைப்புக்காக உளவு பார்ப்பதற்காக கலீலுக்கு பணமும் வழங்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள 3 நபர்களும் கடந்த நவம்பரில் பாகிஸ்தானின் அப்பாஸ்புர் போலீஸ் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்களாவர்" என்றார்

மூவர் மீது பயங்கரவாத சட்டம் மற்றும் வெடிபொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT