மெக்ஸிகோவில் கனமழையினால் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 39 பேர் பலியாகினர்.
மெக்ஸிகோ நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்ந்து வரும் கன மழையினால் மலைப் பிரதேச நகரங்களான பியூப்லா மற்றும் வெராகுரூஸ் போன்ற பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவுகளில் சிக்கி 39 பேர் பலியானதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை இழுந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பசிபிக் பெருங்கடலை மையமாக கொண்டு ஜவியர் என்ற புயல் உருவாகியுள்ளதாக மெக்சிக்கோ நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து அங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள பேரிடர் மீட்புப் படையினர்
மெக்சிஸிகோவில் பெய்து வரும் தொடர் கனமழையினால் அந்நாட்டின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டதால் மக்களின் இயல்பு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.