தெற்கு வங்கதேசத்தின் மகுரா பகுதியைச் சேர்ந்தவர் ஹுசேன் (22). அவரது மனைவி திப்தி கேதன் (18). இத்தம்பதிக்கு 2012-ம் ஆண்டில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும் போதே கைகள், முகத்தில் தோல் தொளதொளவென தொங்கி முதுமை தோற்றத்துடன் காணப்பட்டது.
குழந்தைக்கு பயோஜித் ஷிக்தர் என்று பெற்றோர் பெயரிட்டனர். தற்போது 4 வயதாகும் அந்த சிறுவன் 80 வயது முதியவர் போல் தோற்றமளிக்கிறான். அவனுக்கு இதய நோய், பார்வை குறை பாடு, காது கேளாமை போன்ற குறைபாடுகளும் உள்ளன.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஷிக்தரின் முதுமை நோய்க்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை அளிக்க டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து சிறுவனின் தந்தை ஹுசேன் கூறியதாவது: என் குழந்தைக்கு ஏன் இந்த நிலைமை என்பது தெரியவில்லை. இதற்கான காரணத்தை கண்டறிய முடியாமல் டாக்டர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
எங்களது பூர்விக நிலத்தை விற்று எத்தனையோ மருத்துவம னைகளுக்குச் சென்று சிகிச்சை பார்த்தோம். இயற்கை வைத்தி யம், மதச்சடங்குகள் என பல வழிகளில் முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. கடைசியாக டாக்கா மருத்துவமனைக்கு வந் துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.