உலகம்

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி: 3 தொழிலதிபர்கள் கைது

செய்திப்பிரிவு

துருக்கியில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் கடந்த 15-ம் தேதி இரவு அதிபர் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆளும் ஏ.கே கட்சி, எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து ராணுவ புரட்சியை முறியடித்தனர். இதில் புரட்சி படையை சேர்ந்த 100 வீரர்களும் எர்டோகன் ஆதரவாளர்கள் 208 பேரும் பலியாகினர்.

ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ராணுவத்தின் மூத்த தளபதிகள், நீதிபதிகள், அரசு உயரதிகாரிகள் என 16 ஆயிரத்துக்கும் அதிக மானவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த மதப்பிரச்சாரகர் பெதுல்லா குலென் என்பவர்தான் ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு முக்கியக் காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவரு டன் சேர்ந்து ஆட்சிக் கவிழ்ப்பு சதிச் செயலில் ஈடுபட்டதாக, பாய் டாக் ஹோல்டிங் நிறுவன தலைவர் முஸ்தபா பாய்டாக், அந்நிறுவனத் தின் இரு முக்கிய நிர்வாகிகள் சுகுரு, ஹலித் போய்டாக் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிறுவனம் துருக்கி யின் மிக முக்கியமான நிறுவனங் களுள் ஒன்றாகும். எர்டோகன் அரசு தனது கைது நடவடிக்கைகளை தொழில்துறை பக்கம் விரிவுபடுத்தியிருப்பதையே இது காட்டுகிறது எனக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT