பிலிப்பைன்சில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இதன் தாக்கம் 7.2 ஆக பதிவாகியது. நிலநடுக்கத்திற்கு, இதுவரை 32 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கம் மையம் போகோல் தீவில் கொண்டிருந்தது எனவும் இதனால் சீபு மாகாணத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள மீன்பிடி துறைமுகம் முற்றிலுமாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
செவ்வாய்கிழமை, பிலிப்பைன்சில் தேசிய விடுமுறை. அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் உயிர் சேதம் சற்று குறைவாக இருப்பதாக தெரிகிறது.