உலகம்

நியூயார்க் பொது சுகாதார துறை தலைவராக இந்தியர் நியமனம்

செய்திப்பிரிவு

நியூயார்க் நகர பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள் துறை தலைவராக அமெரிக்கவாழ் இந்திய டாக்டர் ராமநாதன் ராஜு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னையை பூர்விகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதன் ராஜுவை நியூயார்க் நகர மேயர் பில் டி பால்சியோ, இப்பொறுப்பில் நியமித்துள்ளார். அமெரிக்காவின் மிகப்பெரிய பொது மருத்துவ மனைப்பிரிவைக் கொண்டது நியூயார்க் நகரமாகும்.

பொது சுகாதாரத் துறையில் 30 ஆண்டுகால அனுபவமிக்க ராமநாதன் ராஜு இப்போது சிகாகோவின் குக் கவுண்டியின் சுகாதாரம் மற்றும் மருத்துவமனை துறை தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.

SCROLL FOR NEXT