மரண தண்டனையையும் வாழ்நாள் சிறை தண்டனையையும் முற்றிலுமாக ஒழிக்க உலக நாடுகளுக்கு போப் ஆண்டவர் அழைப்பு விடுத்துள்ளார்.
வாட்டிகன் நகரத்தில் சர்வதேச குற்றப்பிரிவு தடுப்பு சட்ட சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுடன் பேசிய போப் ஆண்டவர், "வாழ்நாள் சிறை தண்டனை என்பது சிறையில் மறைமுகமாக அளிக்கப்படும் மரண தண்டனை. இது போன்ற கொடிய தண்டனைகள் இன்னும் உலக நாடுகளால் ஒழிக்க முடியாமல் இருப்பது கவலை அளிக்கிறது. இதனை எதிர்த்து உலக நாடுகள் போராட வேண்டும்" என்றார்.