உலகம்

ஆஸ்திரேலியாவில் மேலும் பரவும் காட்டுத் தீ

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் மேலும் ஒரு வனப்பகுதி தீ பிடித்து எரியத் தொடங்கி இருப்பதால், அப்பகுதியில் உள்ளவர்கள் வெளியேறுமாறு அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிட்னி நகரின் மேற்கு எல்லையில் உள்ள நீலமலைத் தொடர் பகுதி புதிதாக தீ பிடித்து எரியத் தொடங்கி உள்ளது. அதைக் கட்டுப்படுத்தும் பணியில் தீ அணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

காட்டுத் தீ காரணமாக அப்பகுதி யின் வெப்பநிலை அதிகரித்துள்ள துடன், மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் காட்டுத் தீ ஏற்பட்டு 7 நாள்கள் ஆகி உள்ள நிலையில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ள இடங்களின் எண்ணி க்கை 65 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 3,000 வீரர்களும் 95 ஹெலிகாப்டர்களும் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், இன்னமும் 18 இடங்க ளில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதுவரை 200க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் கருகி உள்ளன. ஒருவர் இறந்துள்ளார்.

இதுகுறித்து மாநில ஊரக தீயணைப்புத் துறை ஆணையர் ஷேன் பிட்சிம்மன்ஸ் கூறுகையில், "மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அபாயகட்டத்தைத் தாண்டி காட்டுத் தீ பரவி வருகிறது. தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளபோதிலும், தீ மேலும் பரவ வாய்ப்புள்ளது" என்றார்.

தேவையில்லாத பொருள்களு க்கு 2 சிறுவர்கள் தீ வைத்ததே காட்டுத் தீ ஏற்பட்டதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஒரு சிறுவனை செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகக் கூறப்படு கிறது.

மற்றொரு சிறுவன் அடுத்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT