பிரிட்டிஷ் இளவரசி டயானா கொலை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் நிராகரித்துள்ளனர்.
பாரீஸில் 1997-ம் ஆண்டு கார் விபத்து ஒன்றில் டயானா உயிரிழந்தார். ஆனால் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படு கொலை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பிரிட்டன் சிறப்பு விமானப் படையினருக்கு தொடர்பு உண்டு என்றும் கூறப்பட்டது. அப்படையில் பணியாற்றிய வீரர் ஒருவரின் மனைவி இதற்கான ஆதாரத்தை ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்தார்.
அந்த ஆதாரங்களை ஆய்வு செய்த போலீஸார், அவை வலுவானதாகவும், நம்பகத்தன்மை உடையதாகவும் இல்லை என்று கூறி டயானா கொலை செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டை நிராகரித்தனர். டயானாவுடன் காரில் சென்ற எகிப்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் டோடி அல் பயதும் உயிரிழந்தார். பிரிட்டிஷ் இளவரசர்கள் வில்லியம், ஹாரி ஆகி யோரின் தாயாரான டயானா, இளவரசர் சார்லஸிடம் இருந்து 1996-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.