பிரிட்டனில் ஒரே மாதத்தில் 3-வதாக புதிய புயல் உருவாகி உள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு கனமழை பெய்து வருகிறது.
வடக்கு பிரிட்டன், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து பகுதிகளில் பெய்யும் கனமழையால் அந்தப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள் ளன. வடக்கு பிரிட்டனில் சுமார் 6700 வீடுகள் சேதமடைந்துள்ளன.
ஏற்கெனவே டிசம்பர் மாதத்தில் டெஸ்மாண்ட், ஈவா ஆகிய இரு புயல்கள் வடக்கு பிரிட்டனை புரட்டிப் போட்டன. இதனால் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக கணக்கிடப் பட்டுள்ளது.
இதனிடையே கடந்த 30-ம் தேதி 3-வதாக புதிய புயல் உருவாகி உள்ளது. பிராங்க் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்காட்லாந்தின் சவுத் ஆர்ஸையர் பகுதியில் நேற்றுமுன் தினம் சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ் மழை வெள்ளத் தில் சிக்கி மூழ்கியது. அதில் 2 குழந்தைகள் உட்பட 12 பேர் இருந்தனர். பல மணி நேர போராட் டத்துக்குப் பிறகு ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் பத்திரமாக மீட்கப் பட்டனர்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுவரை 10-க்கும் மேற்பட்ட திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு பிரிட்டனில் வரலாறு காணாத வகையில் வெள்ள பாதிப் புகள் இருந்தாலும் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. அந்த அளவுக்கு மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
சுருட்டும் சூறாவளி
அமெரிக்காவின் தெற்கு, தென்மேற்கு, மத்திய மேற்குப் பகுதிகளில் அடுத்தடுத்து சூறாவளி, புயல் தாக்கி வருகிறது. இதனால் மிக்ஸிகன், டெக்சாஸ், மிசோரி உட்பட 10 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கனமழையால் மிசிசிப்பி நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அந்த நதியோரம் அமைந் துள்ள மிசோரி மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள் ளது. அங்குள்ள செயின்ட் லூயிஸ் நகரம் முழுமையாக தண்ணீரில் மூழ்கியுள்ளது. முப்படை வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர். இதுவரை 54 பேர் உயிரிழந் திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா, பிரிட்டனில் தற்போது பெய்யும் கனமழைக்கு எல்நினோ பருவநிலை மாறுபாடே காரணம் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.