உலகம்

புனிதப் போரில் ஈடுபட மலேசிய இளைஞர்களை ஊக்குவிக்கும் ஐ.எஸ்: நிபுணர்கள் எச்சரிக்கை

பிடிஐ

தெற்கு பிலிப்பைன்ஸில் இருந்து செயல்படும் அபு சய்யாஃப் அமைப்பை, தனது அமைப்பின் ஒரு பகுதியாக ஐ.எஸ். அங்கீகரித்துள்ளது. இந்நிலையில் மலேசிய இளைஞர்களைத் தங்களுடன் இணைந்து போரிடும் படி ஐ.எஸ். உறுப்பினர்கள் கேட்டுக்கொள்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து மலேசியாவில் உள்ள சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக அரசியல் ஆய்வா ளர் மஸ்லீ மாலிக் கூறும்போது, “மலேசியாவில் தங்கள் உதவி எதுவுமின்றி சுயமாகவே புனிதப் போரில் ஈடுபடும்படி இங்குள்ள தங்கள் ஆதரவாளர்களை ஐ.எஸ். தற்போது ஊக்குவித்து வருகிறது” என்றார்.

இது தொடர்பாக கடந்த ஜூன் 23-ம் தேதி ஐஎஸ் 21 நிமிட வீடியோவை சமூக வலைதளங்க ளில் வெளியிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மலேசியாவை சேர்ந்த முகம்மது ராஃபி உதின் என்கிற அபு அவுன் அல்-மலைசி என்பவர் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வில் முகம்மது ராஃபி பேசும்போது, “தெற்கு பிலிப்பைனஸ் செல்ல முடியாத ஐ.எஸ். அனுதாபிகள் மலேசிய மண்ணிலேயே தங்களால் இயன்ற வழியில் புனிதப் போரில் ஈடுப டலாம். உங்களிடம் கார் இருந் தால் எதிரிகள் மீது மோதுங்கள். உங்களிடம் கத்தி இருந்தால் எதிரி யின் மார்பில் குத்துங்கள்” என்று ஊக்கப்படுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT