தங்கள் பகுதிகளில் நடக்கும் குற்றங்களையும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் தடுக்கும் வகையில், வளைகுடா நாடுகள் ஒன்றுபட்ட பிராந்திய பாதுகாப்பு படையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
மானாமாவில் வளைகுடா கூட்டுறவு கவுன்சிலின் கூட்டத்தில் பக்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு ஆகிய ஆறு நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் கலந்துக்கொண்டு பேசி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக வல்லரசு நாடுகளுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திய நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஜி.சி.சி செயலர் ஜெனரல் அப்துலாஃப்-அல்-ஜாயானி பேசுகையில், "இத்திட்டம் தொடர்பான நிதி, நிர்வாக அம்சங்களை ஆய்வு செய்ய வளைகுடா நாடுகளின் உள்துறை அமைச்சர்களைக் கொண்ட செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஜி.சி.சி காவல் படையினர் வளைகுடா பகுதிகளில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து செயல்படுவார்கள்" என தெரிவித்தார்.