உலகம்

பாகிஸ்தான் மருத்துவமனையில் இந்து மருத்துவர் மர்மமான முறையில் மரணம்

பிடிஐ

பாகிஸ்தான் மருத்துவமனையில் பணியாற்றிய இந்து மதத்தைச் சார்ந்த இளம் மருத்துவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

கராச்சி நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றின் ஐசியு பிரிவுக்கு உள்ளே, நாற்காலியில் அமர்ந்த நிலையில், மருத்துவர் அனில்குமார் (32) இறந்து கிடந்ததாக, போலீஸ் அதிகாரி நயீமுதின் தெரிவித்தார். மர்மமான முறையில் அவர் இறந்திருப்பதால், அதுகுறித்து விசாரணை மேற் கொள்ளப் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நேற்று முன்தினம் காலை ஐசியு பிரிவுக்குள் நுழைந்த அவர், வெகு நேரமாகியும் வெளியேற வரவில்லை.

உதவியாளர்கள் பலமுறை கதவைத் தட்டியும் திறக்காததால், சந்தேகமடைந்து கதவை உடைத் துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அனில் குமார் நாற்காலியில் அமர்ந்த நிலையில் இறந்துகிடந்தார். அவருக்கு அருகே ஒரு ஊசியும் கண்டெடுக்கப் பட்டது.

அனில்குமாரின் கையில் சிறிய கட்டு தென்பட்டதால், அந்த ஊசி அவருக்காக பயன்பட்டிருக் கலாம் என்றும், அதனை தடய வியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ள தாகவும் போலீஸ் அதிகாரி நயீமுதின் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT