சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில், 186 நாட்கள் தங்கி யிருந்து பல்வேறு பரிசோதனை களை மேற்கொண்ட மூன்று விண்வெளி வீரர்கள் நேற்று பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.
அமெரிக்காவின் ‘நாசா’ ஆய்வு மையத்தைச் சேர்ந்த டிம் கோப்ரா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையத்தின் டிம் பீக் மற்றும் ரஷ்யாவின் ராஸ்காஸ்மாஸைச் சேர்ந்த யூரி மெலன்சென்கோ ஆகிய மூவரும், சோயுஸ் டிஎம்ஏ-19எம் விண்கலத்தின் மூலம், கஜகஸ்தானில் உள்ளூர் நேரப்படி நேற்று பகல் 3.15 மணிக்கு தரையிறங்கினர்.
புவி வட்டப்பாதையில் இருந்து விலகி பூமியை நோக்கிய பயணத் தின் போது, எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் அனைத்தும் திட்ட மிட்ட படி செயல்பட்டதாக, விண் வெளிக் குழுவினர் திருப்தி தெரிவித்தனர். வீரர்கள் தரையிறங் கியதும் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறத்திலான மிக பிரம்மாண்டமான பாராசூட்டின் கீழே மெதுவாக, விண்கலம் தரையிறங்கிய சமயத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மீட்புப் படை யினரைக் கொண்ட ஹெலிகாப் டர்கள் வானில் வட்டமிட்ட படி இருந்தன.
கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் விண்வெளி ஆய்வு நிலையத்தில் தங்கியிருந்த மூவரும், உயிரியல், உயிரி தொழில்நுட்பம், புவி அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
விண்வெளியில் இயங்கிவரும் சர்வதேச ஆய்வு நிலையத்தை தற்போது, நாசாவின் ஜெஃப் வில்லியம்ஸ் மற்றும் ரஷ்யாவின் ஓலேக் கிரிபோச்கா, அலெக்ஸி ஓவ்சினின் ஆகிய மூவர் அடுத்த மூன்று வார காலத்துக்கு இயக்குவார்கள். அடுத்த குழு அங்கு சென்றவுடன் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள்.