அமெரிக்கா, ரஷ்யா இடையே உறவை வலுப்படுத்த இரு நாட்டு அதிபர்களும் உறுதி பூண்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் நேற்றுமுன்தினம் தொலைபேசியில் பேசினர். அப் போது மத்திய கிழக்கு நாடுகள், இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை, வடகொரிய அணுஆயுத விவகா ரம் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.
சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிராக இருநாடுகளும் இணைந்து செயல்பட ட்ரம்பும் புதினும் ஒப்புக் கொண்டனர். முதல்கட்டமாக ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை அழிக்க இரு தலைவர்களும் உறுதி பூண்டனர்.
‘இரண்டு உலகப்போர்களின் போதும் அமெரிக்காவும் ரஷ்யா வும் இணைந்து செயல்பட்டன. இதேபோல சர்வதேச தீவிர வாதத்துக்கு எதிராக அமெரிக்கா வும் ரஷ்யாவும் இணைந்து செயல்பட வேண்டும்’ என்று அதிபர் புதின் தெரிவித்தார்.
இதை ஆமோதித்த அதிபர் ட்ரம்ப், இருநாட்டு உறவை வலுப் படுத்த வேண்டியது அவசியம் என்று கூறினார்.
ரஷ்ய அதிபர் மாளிகை வெளி யிட்ட செய்திக் குறிப்பில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட் டுள்ளன. கடந்த 2014-ல் உக்ரை னில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது கிரிமியா பகுதியை ரஷ்யா தன் னுடன் இணைத்துக் கொண்டது. இதன்காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளா தார தடைகளை விதித்தது. இந்த தடைகளை நீக்குவது குறித்து அதிபர் ட்ரம்ப் எதுவும் பேசவில்லை என்று தெரிகிறது.