வங்கதேசத்தின் பிரதமராக ஷேக் ஹசீனா 3-வது முறையாகப் பதவியேற்றார். தலைநகர் டாக்காவில் உள்ள அதிபர் மாளிகையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற விழாவில் அந்த நாட்டு அதிபர் அப்துல் ஹமீது, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பொதுத் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் ஆளும் அவாமி லீக் அதிக இடங்களைக் கைப் பற்றியது. நாட்டில் மீண்டும் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில் ஷேக் ஹசீனா நாட்டின் புதிய பிரதமராக ஞாயிற்றுக்கிழமை பதவி யேற்றார். அவருடன் 49 அமைச்சர்களும் பதவியேற்றனர்.