சவூதி அரேபியாவில் ராமர் உள்பட 50 பெயர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபிய பெற்றோர் தடை செய்யப்பட்ட 50 பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டக் கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி லிண்டா, அலைஸ், எலைன், பெஞ்சமின், ராமா, மாயா உள்ளிட்ட 50 பெயர்கள் தடை செய்யப்பட்ட பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இதில் பெஞ்சமின் என்பது இஸ்லாமிய பெயராக இருந்தாலும் தற்போதைய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் அதே பெயர் இருப்பதால் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படு கிறது. அரேபிய மொழி அல்லாத சொற்கள், இஸ்லாமுக்கு எதிரான சொற்கள், சவூதி கலாச்சாரத்
துக்கு எதிரான சொற்கள் என்ற அடிப்படையில் குறிப் பிட்ட பெயர்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.