உலகம்

தென்கொரிய அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி

செய்திப்பிரிவு

வடகொரியாவின் எந்த பகுதியையும் தாக்கும் திறன்படைத்த அதிநவீன ஏவுகணை சோதனையை தென் கொரிய அரசு நேற்று வெற்றிகரமாக நடத்தியது.

சர்வதேச விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் அணு குண்டு ஆராய்ச்சி, ஏவுகணை சோதனை போன்ற நடவடிக்கை களில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. தென் கொரியாவையும் அமெரிக்காவையும் அழித்து விடுவோம் என்றும் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் மிரட்டல் விடுத்து வருகிறார். இந்நிலையில், தென் கொரிய அரசு 800 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் அதிநவீன ஏவுகணையை நேற்று சோதனை செய்து பார்த்தது.

முழுக்க முழுக்க உள்நாட்டி லேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவு கணை வடகொரியாவின் எந்தப் பகுதியையும் தாக்கி அழிக்கும் திறன்படைத்தது. இந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்தது என்று ‘யான்ஹேப்’ செய்தி நிறுவனம் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தான் ஜப்பான் கடல் பகுதியில் வட கொரியா ஏவுகணை சோதனை நடத் தியது. அமெரிக்கா சீனா இடையே விரைவில் மாநாடு நடக்க உள்ளது. அப்போது வடகொரியாவின் அச் சுறுத்தல்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா, சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கவே வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மறுநாளே பதிலுக்கு தென் கொரியாவும் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா முழு ஆதரவும் ராணுவ உதவியும் செய்து வருகிறது.

SCROLL FOR NEXT