இலங்கையில் மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வருவதால், அங்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதாக, கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், காமன்வெல்த்தின் முக்கிய நோக்கங்களை இலங்கை அரசு பின்பற்றத் தவறிவிட்டது.
அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சிறுபான்மையின மக்கள் முதலானோர் சிறைப்பிடிக்கப்படுவது மற்றும் கொல்லப்படுவது குறித்து வெளியான தகவல்கள் இன்னமும் கனடாவுக்கு வருத்தமளிப்பதாக உள்ளது. எனவே, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் நான் கலந்துகொள்ள மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நவம்பர் 15-ம் தேதி காமன்வெல்த் மாநாடு தொடங்குகிறது. 3 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக்கூடாது என்று தமிழக அரசியல் கட்சிகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.