உலகம்

பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் சாவு

செய்திப்பிரிவு

கைதாகி பாகிஸ்தான் சிறைச்சாலை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர் ஒருவர் இறந்து கிடந்தார்.

அவரது சாவுக்கான காரணம் தெரியவில்லை. லாந்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த மீனவரின் பெயர் கிஷோர் பகவான் என பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், மீனவரின் சாவு பற்றி அதிகாரபூர்வ தகவல் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

கராச்சி சிறைச்சாலை ஒன்றில் கடந்த டிசம்பர் மாதத்திலும் இந்திய மீனவர் பிகா லகா ஷியா என்பவர் உயிரிழந்தார். அவரது சடலம் இதுவரை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. ஷியால் உடல் ஒப்படைக்கப்பட்டதும் சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறைச்சாலையில் ஷியால் டிசம்பர் 19ம் தேதி உயிரிழந்தார். அவரது சாவுக்கான காரணம் உறுதி செய்யப்படவில்லை.

SCROLL FOR NEXT