எல்லைப் பிரச்சினை தொடர்பாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இடையே கடும் சண்டை நடைபெற்றுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலி பான்கள் ஆட்சியில் இருந்தபோது அந்த அரசை பாகிஸ்தான் அரசு அங்கீகரித்தது. அமெரிக்க கூட்டுப் படை தாக்குதலில் தலிபான் அரசு அகற்றப்பட்டு ஜனநாயக அரசு நிறுவப்பட்டுள்ளது.
ஆனால் தற்போதைய ஆப்கானிஸ்தான் அரசுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமுக உறவு இல்லை. இருநாடுகளின் தலைவர்களும் பரஸ்பரம் கடுமை யாக குற்றம் சாட்டி வருகின்ற னர். தலிபான்களுக்கு பாகிஸ் தான் அடைக்கலம் அளிப்பதாக ஆப்கானிஸ்தான் பலமுறை பகிரங்கமாக குற்றம் சாட்டி யுள்ளது. மேலும் இரு நாடுகளுக் கும் இடையே எல்லைப் பிரச்சினையும் நீடிக்கிறது.
கடந்த சனிக்கிழமை டோர் ஹாம் பகுதியில் புதிதாக பாதை அமைத்து நுழைவுவாயில் அமைக்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். இதற்கு ஆப்கானிஸ்தான் ராணுவ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக் கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் தொடர்ந்து முன்னேறியதாகக் கூறப்படுகிறது.
இதன்காரணமாக இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்தச் சண்டை பல மணி நேரம் நீடித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ஒரு வீரர் உயிரிழந்தார். 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
பாகிஸ்தான் ராணுவ தரப்பில் உயிரிழப்பு குறித்தோ, வீரர்கள் காயமடைந்தது குறித்தோ எவ்வித தகவலும் வெளியிடப்பட வில்லை. எனினும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதாக ஆப்கானிஸ் தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.