தாலிபன் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப் சாயிக்கு அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கைலக்கழகம் மனிதேநய விருது வழங்கி கவுரவித்துள்ளது. மலாலவிற்கு 2013ம் ஆண்டுக்கான பீட்டர் ஜெ.கோம்ஸ் மனிதநேய விருது வழங்கப்பட்டுள்ளது.
பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்ட மலாலா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தாலிபன் பயங்கவராதிகளால் சுடப்பட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவருக்கு பிரிட்டனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் மீண்டெழுந்த மலாலா பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல், பெண் கல்விக்காக தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
16 வயேத நிரம்பிய மலாலா எதிர்காலத்தில் ஒரு அரசியல்வாதி ஆக வேண்டும் என்பேத தனது லட்சியம் என்கிறார்.