உலகம்

இந்தியாவில் 1.4 கோடி கொத்தடிமைகள்!

செய்திப்பிரிவு

இந்தியாவில் சுமார் 1.4 கோடி பேர் கொத்தடிமை நிலையில் வாழ்வதாக சர்வதேச ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கொத்தடிமை முறை குறித்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு 162 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது.

இதில் உலகம் முழுவதும் சுமார் 3 கோடி பேர் கொத்தடிமைகளாக வாழ்வது தெரியவந்துள்ளது. இதில் 72 சதவீதம் பேர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள். 3.78 சதவீதம் பேர் அமெரிக்கர்கள்.

ஆசியாவில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும், ஆப்பிரிக்காவில் மரிட்டானியா, நைஜீரியா ஆகிய நாடுகளிலும் கொத்தடிமை கொடுமை அதிகம் இருப்பதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அடிமைத்தனம் மிக மிகக் குறைவாக உள்ளது என்று பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT