கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் ஜெட் விமானத்தின் ஜெனரேட்டரில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக விமானம் ஹாங்காங்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
முன்னதாக, ஹாங்காங் விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. ஆனால் விமானம் அதிர்ஷ்டவசமாக விபத்துள்ளாகாமல் தப்பித்தது. பயணிகள் 271ச் பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இது குறித்து மலேசியன் ஏர்லைன்ஸ் கூறுகையில், எம்.ஹெச்-066 என்ற அந்த விமானம் சீயோல் நோக்கி புறப்பட்டது. அப்போது விமானத்திற்கு மின்சாரம் விநியோகிக்கும் பிரதான ஜெனரேட்டர் செயலிழந்தது. இருப்பினும் துணை ஜெனரேட்டர் விமானத்திற்கு மின் விநியோகித்ததால் விமானம் பத்திரமாக தரையிறக்க்கப்பட்டது, என தெரிவிக்கப்பட்டது.