உலகம்

நியூயார்க்கில் குண்டு வெடிப்பு: 29 பேர் காயம்

ஐஏஎன்எஸ்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் செல்சீ மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 8.30-க்கு குண்டு வெடித்தது. இதில் 29 பேர் காயமடைந்தனர்.

ஐ.நா.சபையின் வருடாந்திர கூட்டம் நடைபெற உள்ள நிலை யில், காஷ்மீரின் உரி பகுதியில் தாக்குதல் நடைபெறுவதற்கு 30 நிமிடம் முன்னதாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ குவுமோ கூறும்போது, “இது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல். இது தொடர்பாக 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

அசோசியேட்டடு பிளைன்ட் ஹவுசிங் சொசைட்டி பகுதியில், பிரஷர் குக்கரில் வெடிகுண்டை மறைத்து வைத்து வெடிக்க வைத்துள்ளனர். இந்த கட்டிடத் திலிருந்து சிறிது தொலைவில் மற்றொரு வெடிகுண்டு இருந்தது கண்டிபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.

மேலும் நியூஜெர்சி மாகாணத்திலும் சனிக்கிழமை ஒரு குண்டு வெடித்துள்ளது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதே மாகாணத்தில் எலிசபெத் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையில் 5 வெடிகுண்டுகள் இருந்தது நேற்று முன்தினம் இரவு கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதவிர, மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் மர்ம நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர். இதற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

SCROLL FOR NEXT