உலகம்

உலக வர்த்தக அமைப்பு விதிகளில் திருத்தம் வேண்டும்: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

பிடிஐ

உணவு தானிய சேமிப்புகளை ஏழைகளுக்கு அளிக்கும் சுதந்திரம் வளரும் நாடுகளுக்கு கட்டாயம் வேண்டும், பொருளாதாரத் தடை என்ற அச்சுறுத்தல் இல்லாமல், உணவுப் பாதுகாப்புக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் உலக வர்த்தக அமைப்பு விதிகளில் தேவையான திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று ஐ.நா.வில் இந்தியா உறுதிபடத் தெரிவித் துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. பொதுச் சபை அமர்வில் இந்தியக் குழுவுக்கான தலைவர் அமித் நரங் பேசியதாவது: வளர்ந்து வரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உணவுப் பாதுகாப்பு மிகவும் அவசியம். பிற பிரச்சி னைகளுக்கு தருவதைப் போல இப்பிரச்சினைக்கும் முன்னுரிமை கொடுத்து தீர்வு காணவேண்டும்.

2013 டிசம்பரில் பாலியில் நடந்த உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில் இந்தியா நன்னம்பிக் கையுடன் முனைப்புடன் பங்கேற் றது. வர்த்தகத்தை எளிமையாக்கு வது உள்பட பாலியில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு இந்தியா கட்டுப்பட தயாராக உள்ளது.

இம்முடிவுகளை ஏற்றுக் கொண்டு இந்தியா கையெழுத் திட்டுள்ள நிலையில் இதிலிருந்து பின்வாங்கிச் செல்ல விருப்ப மில்லை. என்றாலும் பாலி முடிவு களால் ஏற்படும் சமச்சீரற்ற வளர்ச்சி குறித்து இந்தியா கவலை கொள்கிறது.

பாலி உடன்பாட்டின்படி வர்த்த கத்தை எளிமையாக்குவ தில் முழு கவனம் செலுத்தப்படும் அதே நேரத்தில், பிற முடிவுகளில் குறிப்பாக உணவுப் பாதுகாப்பு உடன்பாட்டில் கவனம் செலுத்தப் படவில்லை.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு பொருளாதார தடை என்ற அச்சுறுத்தல் இல்லா மல், உணவு தானிய சேமிப்பு களை ஏழைகளுக்கு அளிக்கும் சுதந்திரம் கட்டாயம் இருக்க வேண்டும்.

சர்வதேச வர்த்தகத்தால் வளரும் நாடுகள் உண்மையான பயனை அடையும் வகையில் வர்த்தக நடவடிக்கைகள் இருக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT