உலகம்

தீவிரவாதிகளுக்கு எதிராக தடை விதிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் குழுக்களின் நடைமுறைகள் திருத்தப்பட வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தீவிரவாதிகளுக்கு எதிராக தடை விதிப்பது தொடர்பாக முடி வெடுக்கும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் குழுக்களின் செயல் பாட்டு நடைமுறைகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என, இந்தியா வலியுறுத்தியுள்ளது.

பதான்கோட் தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி மசூத் ஆசாருக்கு எதிராக தடை விதிக்குமாறு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா முறையிட்டது. இவ்விவகாரம், ஐநா பாதுகாப்புக் கவுன்சிலின் ‘1267’ குழுவில் கடந்த ஏப்ரல் மாதம் விவாதத்துக்கு வந்தபோது, குழுவில் இடம் பெற்ற 14 உறுப்பு நாடுகள் அனைத்தும், இந்தியாவின் கோரிக்கையை ஏற்றன.

ஆனால், சீனா மட்டும் தனது ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தி ஆசாருக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்திவைத்தது. அதேபோல், மும்பை தாக்குதலு க்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி லக்விக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா முன் வைத்த கோரிக்கைக்கும் சீனா முட்டுக்கட்டை போட்டு தடுத்தது.

இந்நிலையில், ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலின் தடைவிதிக்கும் குழுவின் செயல்பாட்டு முறை குறித்த விவாத கூட்டம் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதின் பேசும்போது, ‘‘பாதுகாப்புக் கவுன்சிலின் துணைக் குழுக்கள் ஆண்டுக்கு 1,000 முடிவுகளை மேற்கொள்கின் றன. அவற்றின் செயல்பாடுகள் பெரும்பாலும் ரகசியமாகவே உள்ளன. சாதகமான அம்சங் களை பகிரங்கமாக தெரிவிக்கும் குழுக்கள், பாதகமான அம்சங் களை மறைத்துவிடுகின்றன.

குறிப்பிட்ட ஒரு முடிவை மேற்கொள்ளும் போது, வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் நாடுகள் எதற்காக, எந்த நியாயத் தின் அடிப்படையில் எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்பதை வெளிப் படையாக தெரிவிக்க வேண்டும். அதற்கேற்ப, பாதுகாப்புக் கவுன் சிலின் துணைக் குழு நடவடிக்கை களில் மாற்ற செய்யப்பட வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT