உலகம்

சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் மன்மோகனை முந்திய சோனியா!

செய்திப்பிரிவு

சர்வதேச அளவில் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள், சக்திவாய்ந்த பெண்கள் மற்றும் செல்வாக்கு மிகுந்த பெண்கள் ஆகியோர் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இதில், சக்திவாய்ந்தவர்கள் பட்டியலில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 21-வது இடத்தில் இருக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங் இவரைவிட 7 இடங்கள் பின்தங்கி 28-வது இடத்தில் இருக்கிறார்.

இந்தப் பட்டியலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முதலிடத்திலும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் சோனியா காந்தி 9-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

அதேவேளையில், செல்வாக்கு மிகுந்த பெண்கள் பட்டியலில் சோனியா காந்தி 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் முதல் இடத்தையும், பிரேசில் அதிபர் டில்மா ரூசெஃப் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

SCROLL FOR NEXT