உலகம்

மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கு பிரிட்டன் உளவு அமைப்பில் வேலை: நூதன முயற்சி

செய்திப்பிரிவு

பிரிட்டனைச் சேர்ந்த முக்கிய உளவு அமைப்பு ஒன்று மூளை வளர்ச்சி குறைபாடு (டிஸ்லெக்சிக்) பிரச்சினையால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை உளவாளிகளாக பணியில் அமர்த்தி உள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையாக இத்தகைய செயலிலி ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசு தொலைத்தொடர்பு தலைமையகம் (ஜிசிஎச்க்யூ) பிரிட்டனின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பு ஆகும். டிஸ்லெக்சியா குறைபாடு உள்ள 120 பேருக்கு இந்த அமைப்பு வேலை கொடுத்துள்ளது. இதுகுறித்து இந்த அமைப்பின் தகவல் தொழில்நுட்ப நிபுணர் மேட் கூறும்போது, “சராசரி மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத ரகசிய குறியீடுகளை அறிந்து கொள்ளும் திறன் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளது” என்றார்.

இந்த அமைப்பு ஆண்டுதோறும் பிரபலமான பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று, டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டவர்களை தேர்ந்தெடுத்து வேலைக்கு அமர்த்தி வருகிறது. படிக்க, எழுத தெரியாத அல்லது வார்த்தைகளை புரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ள குழந்தைகள் டிஸ்லெக்சிக்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். அதேநேரம் இவர்களுக்கு ரகசிய தகவல்களை பரிமாறும் அபரிமிதமான திறன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

உதாரணமாக, 2-ம் உலகப் போரின்போது எதிரி நாடுகளின் ரகசிய குறியீட்டை அறிந்து கொள்ள பிரிட்டனுக்கு ஆலன்டுரிங் என்பவர் உதவி செய்துள்ளார். இவர் மேற்கண்ட குறைபாடு உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT