சர்ச்சைக்குரிய தென்சீன கடல் பகுதியை நோக்கி நடமாடும் புதிய ராக்கெட் லாஞ்சர்களை வியட்நாம் நகர்த்தி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தென்சீன கடல் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அத்துடன் ராணுவ நோக்கத்துக் காக அங்கு செயற்கையான தீவு களையும் உருவாக்கி வருகிறது. சீனாவின் இந்நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றன.
இது தொடர்பாக சர்வதேச நீதி மன்றத்தில் பிலிப்பைன்ஸ் நாடு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தென்சீன கடல் பகுதியில் சீனா வுக்கு எந்த உரிமையும் இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும் இந்த தீர்ப்பை சீனா ஏற்க வில்லை. மேலும், அங்கு விமா னத்தை தரையிறங்குவதற்கான ஓடு பாதைகள், ரேடார் கண்காணிப்பு மையங்கள் மற்றும் ராணுவ நிலைகளை கட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இதையடுத்து தனது உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், சீனாவின் விமான ஓடுபாதைகள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்தும் வியட் நாம் ராக்கெட் லாஞ்சர்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் சீனாவுக்கும், வியட் நாமுக்கு இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது.
சீனாவின் வான் வழி தாக்குதலை முறியடிக்க ராக்கெட் லாஞ்சர்களை வியட்நாம் மறைவிடத்தில் வைத் திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நடவடிக்கையை வியட்நாம் மறுத்தபோதிலும் மேற்கத்திய ராணுவ முகமைகள் இந்த தகவலை உறுதிபடுத்துள்ளன.
சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலி டம் இருந்து ராக்கெட் லாஞ்சர் களை ஏவும் நவீன ராணுவ தளவாடங்களை வியட்நாம் வாங்கி இருப்பதாகவும், இதன்மூலம் 150 கி.மீ தூரம் வரையிலான இலக்குகளை துல்லியமாக தாக்க முடியும் என்றும் தகவல்கள் வெளி யாகியுள்ளன. தவிர ஆளில்லா உளவு விமானங்கள், கடற்படை கப்பல்கள் மற்றும் நிலத்தில் நிறுத் தப்பட்டுள்ள ராணுவ நிலைகள் ஆகியவற்றையும் தகர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராணுவத்தை நவீனப் படுத்தும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன 6 நீர்மூழ்கி கப்பல்களையும் வியட்நாம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தென்சீன கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
சர்ச்சைக்குரிய தென்சீன கடல் பகுதி முழுவதுமே தங்களுக்கு தான் சொந்தம் என வியட்நாம், சீனா, தைவான் ஆகிய நாடுகளும், குறிப்பிட்ட சில பகுதிகள் தங்களுக்கு சொந்தம் என பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் புருனே ஆகிய நாடுகளும் உரிமை கோரி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.