உலகம்

வாஷிங் மெஷினில் சிக்கிய 11 வயது சிறுமி மீட்பு

செய்திப்பிரிவு

அமெரிக்காவைச் சேர்ந்த 11 வயது சிறுமி, மறைந்திருப்பவர்களைக் கண்டுபிடிக்கும் விளையாட்டில் ஈடுபட்டபோது வாஷிங் மெஷினுக்குள் சிக்கிக் கொண்டார். 90 நிமிடங்களுக்குப் பிறகு அவரை மீட்டனர்.

உடா மாநிலம் சால்ட் லேக் சிட்டியைச் சேர்ந்த அந்த சிறுமி, தனது சகோதரி மற்றும் பெற்றோரின் உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சிறந்த இடமாகக் கருதி வாஷிங் மெஷினுக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறாள்.

இதை அறிந்த பெற்றோர் அவளை மீட்கப் போராடியும் முடியவில்லை. பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரை வரவழைத்து 90 நிமிடங்களுக்குப் பிறகு சிறுமியை மீட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT