அமெரிக்க அதிபர் ஒபாமாவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் 29, 30 ஆகிய இரு நாட்கள் சந்தித்துப் பேசவுள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஜோஷ் எர்னெஸ்ட் கூறும்போது, “செப்டம்பர் 29 மற்றும் 30-ம் தேதிகளில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்துப் பேச அமெரிக்க அதிபர் ஒபாமா ஆர்வமாக உள்ளார்.
இரு நாடுகளின் குடிமக்களின் நலனைக் கருதி, பல்வேறு துறைகளில் இருதரப்பும் கூட்டாளிகளாக செயல்படுவதற்கான வழிவகைகள் குறித்து இருவரும் பேச்சு நடத்துவார்கள்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் 29, 30 ஆகிய இரு நாட்கள் சந்தித்துப் பேசவுள்ளார்.களில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்தும், ஆப்கானிஸ்தான், சிரியா, இராக் நாடுகளின் அரசியல் நிலவரம் குறித்தும் இருவரும் விவாதிப்பார்கள்” என்றார்
அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கெய்த்லின் ஹேடன் கூறும்போது, “இரு தலைவர்களின் சந்திப்பு குறித்த முழு விவரங்களை 2 வாரங்களுக்குப் பிறகு வெளியிடவுள்ளோம். இருவரும் செப்டம்பர் 29, 30 ஆகிய இரு நாட்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்துள்ளதன் மூலம் இருநாடுகளின் இடையேயான உறவை மேம்படுத்த நாங்கள் அளித்து வரும் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம்” என்றார்.
கடந்த 2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த மதக் கலவரத்தை அடுத்து, 2005-ம் ஆண்டு நரேந்திர மோடி அமெரிக்கா வருவதற்கான விசாவை வழங்க அந்நாடு மறுத்துவிட்டது. இந்நிலையில், கடந்த மே மாதம் நரேந்திர மோடி பிரதமரானதைத் தொடர்ந்து அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. அமெரிக்காவுக்கு வருமாறு மோடிக்கு அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்திருந்தார்.
அதோடு, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் ஆகியோர் டெல்லியில் மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பது நினைவுகூரத்தக்கது.