உலகம்

இந்தோனேசிய கப்பல் தீ விபத்தில் 23 பேர் பலி

ஐஏஎன்எஸ்

இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் மாரா ஆங்கி துறைமுகத்தில் இருந்து திடங் தீவுக்கு 230க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கப்பல் நேற்று புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சற்று நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கப்பலின் பல்வேறு பகுதிகளுக்கு தீ பரவியது.

இதனால் கப்பலின் இயக்கத்தில் எந்த பாதிப்பும் இல்லை. கப்பல் மீண்டும் ஜகார்தாவுக்கு திருப்பப்பட்டது. பேரிடர் மேலாண்மைக் குழுவினர் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு, பெரும்பாலான பயணிகளை உயிருடன் மீட்டனர். 17 பேரை காணவில்லை என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் கப்பலில் பயணம் செய்த 23 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் கப்பலில் இருந்து மீட்கப்பட்டன. தவிர, 17 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரி வித்தனர்.

SCROLL FOR NEXT