உலகம்

மனித உரிமை பிரச்சினைகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது: ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் ராஜபக்ச‌ பேச்சு

ஐஏஎன்எஸ்

ஒரு நாட்டில் சர்வதேச விசார ணையை மேற்கொள்வதற்கு அழுத்தம் தரும் விதமாக மனித உரிமைகளை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது என்று இலங்கை அதிபர் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுசபை கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

"மனித உரிமைகளை அரசியல் ஆயுதமாகப் பயன் படுத்துவதை விடுத்து அவற்றை நியாய, தர்ம சிந்தனைகளாகப் பார்க்க வேண்டும். ஒரு நாட்டின் சமூகக் கட்டமைப்பு மற்றும் கலாச்சார பாரம்பரியங்களைக் கருத்தில் கொள்ளாமல் சர்வதேச விசாரணை மேற்கொள்வது என்பது பல அழிவுகளை உண்டாக்கும்.

மனித உரிமை கவுன்சிலின் தவறான திட்டங்களால் எனது நாடு பலிகடாவாகி இருக்கிறது. எங்களின் முக்கியமான சாதனை களை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் எங்கள் நாடு தொடர்ந்து பல்வேறு தாக்குதல் களுக்கு இலக்காகி வருகிறது. மனித உரிமைகள் மீறப்படும் மற்ற நாடுகளைக் காட்டிலும் அணுகுமுறையில் பல அவலங் களை நாங்கள் சந்தித்து வருகிறோம். போருக்குப் பிறகு வட மாகாணத்தில் பல்வேறு மறுகட்டமைப்பு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறோம். தவிர, 28 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு தேர்தலை யும் நடத்தி இருக்கிறோம்.

இவ்வளவுக்கும் பிறகு எங்களைப் போன்ற நாடுகள் எல்லாம் சர்வதேச அமைப்பு களால் பல்வேறு கொடுமை களுக்கு ஆளாகி வருகிறோம். பேச்சு வார்த்தைகள் மூலமும், பெருமளவில் புரிந்து கொள்ளுதல் மூலமும் ஐ.நா. அமைப்புகள் எங்களைப் போன்ற நாடுகளுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். அப்போது தான் உலகளாவிய சவால்களுக்கு நீடித்த தீர்வுகளைக் காண முடியும்".

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT