உலகம்

அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுக்கு தயார்: ரஷ்யா அறிவிப்பு

செய்திப்பிரிவு

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரவ், மாஸ்கோவில் நேற்று நிருபர் களிடம் கூறியதாவது: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ரஷ்யாவுக்கு எதிராகச் செயல்பட்டார்.

புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் ரஷ்ய மக்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளார். ட்ரம்பின் வெளி யுறவு கொள்கையை நாங்கள் வரவேற்கிறோம்.

அணுஆயுத விவகாரம் உட்பட அனைத்து முக்கிய பிரச்சினைகள் குறித்தும் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வரும் 20-ம் தேதி அமெரிக்கா வின் புதிய அதிபராக ட்ரம்ப் பதவியேற்க உள்ளார். அமெரிக்க நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்துப் பேச தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT