தீவிரவாதத்தை ஒத்ததுதான் நீஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதல் எனக் கூறியிருக்கிறார் பிரான்ஸ் நாட்டு அதிபர் பிரான்காயிஸ் ஹொலாந்தே.
பிரான்ஸ் நாட்டில் நீஸ் நகரில் வியாழக்கிழமை இரவு பொதுநிகழ்ச்சி ஒன்றில் மக்கள் திரளாகக் கூடியிருந்த இடத்தில் மர்ம நபர் ஒருவர் லாரியை அதிவேகமாக செலுத்தியதில் 80 பேர் உடல் நசுங்கி இறந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் பிரான்ஸ் அதிபர் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியிருந்தார். அக்கூட்டத்துக்குப் பின்னர் தேசிய தொலைக்காட்சியில் பேசிய அவர், "நீஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதல் தீவிரவாதம் என்பதை மறுப்பதற்கில்லை" என்றார்.