பாகிஸ்தானில் அரசு மருத்துவ மனை வளாகத்தில் குண்டு வெடித்ததில் 70 பேர் உயிரிழந்தனர்; 100-க்கும் அதிகமானோர் காய மடைந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் நேற்று காலை பிரபல வழக்கறிஞரும், பலுசிஸ்தான் பார் கவுன் சில் தலைவருமான பிலால் அன்வர் காசி என்பவர் அடையா ளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் உடல் குவெட்டாவி லுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. மருத்து வமனை வளாகத்தில் நூற்றுக் கணக்கான வழக்கறிஞர்கள், பொதுமக்கள் திரண்டிருந்தனர். ஏராளமான செய்தியாளர்களும் நின்றிருந்தனர்.
அப்போது அவசர சிகிச்சைப் பிரிவு அருகே குண்டு வெடித்தது. இதில், 70 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந் தனர். உயிரிழந்தவர்கள், காய மடைந்தவர்களில் பெரும்பாலா னவர்கள் வழக்கறிஞர்கள். ஒரு செய்தியாளர் உயிரிழந்துள்ளார் மற்றொருவர் படுகாயமடைந்துள் ளார்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக போலீஸார் தெரிவித்துள் ளனர். காயமடைந்தவர்கலில் 20 பேரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, குவெட்டா மருத்துவமனைகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப் பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்புக்கு தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ் தான் ஜமாத் உல் அரார் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பலுசிஸ்தான் மாகாண முதல்வர் சனாவுல்லா ஜெஹ்ரி, “இது தற்கொலைப்படைத் தாக் குதலைப் போலத் தெரிகிறது” எனக் கூறியுள்ளார்.
மாகாண உள்துறை அமைச்சர் சர்பிராஸ் பக்டி, ‘இது தீவிரவாதச் செயல். பாதுகாப்பு குறைபாடுகளால் இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் இரங்கலும், காயமடைந்தவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்துள்ள பிரதமர் நவாஸ் ஷெரீப், குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் அன்வர் காசியின் கொலைக்கும், குண்டுவெடிப்புக்கும் தொடர்பு உள்ளதா என தெளிவுபடுத்தப்படவில்லை. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.